முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

கட்டாயம் திருப்பி வந்துவிடுவேன் எனவும், வந்து ஜெயலலிதா இருந்தபோது கட்சி எவ்வாறு இருந்ததோ அதேபோன்று கொண்டுவந்து விடலாம் என்று அதில் கூறுகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டதாக சசிகலாவிடம் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, மாநில முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டபேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, தற்போது அதிமுகவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன்தொடர்ச்சியாக அவர் அதிமுக நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ ஒலிபரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச்செயலாளர் சுமதியுடன் சசிகலா உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.

Also read: அனைத்து மின்இணைப்புகளிலும் உயிர் காக்கும் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும்; தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

அதில் சசிகலாவிடம் பேசும் சுமதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது என சசிகலாவிடம் வருத்தம் தெரிவிக்க, அதற்கு சசிகலா " தலைவர் எம்ஜிஆர் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதனால் தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தான் கட்டாயம் திருப்பி வந்துவிடுவேன் எனவும், வந்து ஜெயலலிதா இருந்தபோது கட்சி எவ்வாறு இருந்ததோ அதேபோன்று கொண்டுவந்து விடலாம் என கூறுகிறார். இந்த ஆடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

செய்தியாளர் - கிருஷ்ணகுமார்

First published:

Tags: ADMK, Sasikala