மயிலாடுதுறை அருகே வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!

மயிலாடுதுறை அருகே வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!

வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் எரிந்து கிடப்பதால் கொலையா, தற்கொலை செய்து கொண்டாரா என குடும்பத்தினர் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 • Share this:
  மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைநம்பி (58). இவர் அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட அறிவுடைநம்பி சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

  Also read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

  இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வாயில் துணி அடைத்தபடி எரிந்த நிலையில் அறிவுடைநம்பி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அறிவுடைநம்பி கையில் பெட்ரோல் கேனுடன் செல்வது பதிவாகியிருந்தது. வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் எரிந்து கிடப்பதால் கொலையா, தற்கொலை செய்து கொண்டாரா என குடும்பத்தினர் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Also read: தஞ்சாவூரில் மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக தலைவர் போக்சோவில் கைது...

  தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - கிருஷ்ணகுமார்
  Published by:Esakki Raja
  First published: