ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் போக்சோவில் கைது... சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்

10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் போக்சோவில் கைது... சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுவன் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மயிலாடுதுறை : சீர்காழியல் 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மகளிர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் 10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுவன் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  Also Read : அம்பேத்கர் புகைப்படம் வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  இதுகுறித்து சிறுமியின் பாட்டி சந்திர சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து 14 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சீர்காழி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  Published by:Vijay R
  First published:

  Tags: Crime News, Mayiladuthurai, Pocso, Sirkazhi