ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் கூலித்தொழிலாளி கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் கூலித்தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் கைதான நபர்

போக்சோ சட்டத்தில் கைதான நபர்

Mayiladuthurai : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய விவகாரத்தில் கூலித்தொழிலாளி கைது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சுந்தரமூர்த்தி (வயது 34). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது சுவர் அமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் 9-ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியும், கட்டாயப்படுத்தியும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவர் இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்த சிறுமியை அவரது பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

Also Read: திருட வந்த இடத்தில் வாலிபர் செய்த செயல் - சிசிடிவி பார்த்து அதிர்ந்த உரிமையாளர்

இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா மற்றும் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

First published:

Tags: Crime News, Girl Child, Pocso, Police