மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தற்காஸ் கிராமத்தில் கமலத்தம்மாள் பாட்டிக்கு நடைபெற்ற 100ஆவது பிறந்த நாள் விழாவில் கிராமமே கலந்துகொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, ஆசி பெற்றனர்.
சீர்காழி அருகே தற்க்கஸ் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு மனைவி கமலத்தம்மாள்(100). இவரது கணவர் கோவிந்தராசு கடந்த 1994ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். கோவிந்த கமலத்ம்மாளுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், மருமகன், மருமகள், பேரன் பேத்திகள் கொள்ளுப்பேரன், எள்ளுபேரன், குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உள்ளனர்.
கமலத்தம்மாளுக்கு 100வது வயது துவங்கியதை ஒட்டி குடும்பத்தினர், மற்றும் கிராம மக்கள் சார்பில் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட முடிவுசெய்தனர். அதனைத்தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கியும் விருந்து உபசரிப்பு செய்தும் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
100 வது பிறந்தநாள் காணும் கோவிந்த கமலத்தம்மாளை இதுவரை எந்த நோயும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கொரோனா காலத்தில்கூட கொஞ்சம் கூட அவ அஞ்சாமல் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என எந்த நோயும் அவருக்கு இல்லை என்கின்றனர்.
கமலத்தம்மாள பாட்டிக்கு, கண் பார்வை மிகவும் கூர்மையாக இருப்பதால், அவர் இதுவரை கண்ணாடி அணிந்து கொண்டது கிடையாது என்றும், இதுவரை மருத்துவமனைக்கு சென்றதும் கிடையாது என்றும், மருந்து சாப்பிட்டதும் கிடையாது என்றும் சொல்கின்றனர்.
எனினும், திடகாத்திரத்துடனும் மன நிறைவுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சைவம் மற்றும் அசைவ உள்ளிட்ட எந்த உணவு சாப்பிட்டாலும் அவருக்கு எளிதில் ஜீரணம் அடைந்து விடுகிறது என்று உறவினர்கள் கூறுகின்றனர். இந்நிலைரயில், பிறந்த நாள் விழா காணும் கோவிந்தம்மாள் வீட்டிற்கு சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் மற்றும் தற்காஸ் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நேரில் வந்து காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.
Must Read : சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் - புகழேந்தி
கோவிந்த கமலத்தம்மாளின் நூறாவது பிறந்த நாள் விழாவையொட்டி கிராமமே கோலாகலமாக காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Birthday, Happy BirthDay