• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி

கோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி

நாட்டுப்புற கலைஞர்கள்

நாட்டுப்புற கலைஞர்கள்

நாடுப்புற கலைஞர்கள் கையில் திருவோடு ஏந்தி பேரணியாகச் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

  • Share this:
    மயிலாடுதுறையில் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க தமிழக அரசை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் விநாயகர், காளி, ராமர், அரிச்சந்திரன், விஸ்வாமித்திரர் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிவித்து கையில் திருவோடு ஏந்தி பேரணியாகச் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதில், கோயில் விழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி, கோயில் விழாக்களை நடத்த விலக்கு அளிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் இருந்து பேரணியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

    முன்னதாக அவர்கள் விநாயகர், நாரதர், ராமர், கருப்பசாமி, பச்சைக்காளி, பவளக்காளி, அரிச்சந்திரன், சந்திரமதி, விஸ்வாமித்திரர், பபூன் போன்ற பல்வேறு வேடங்களைப் பூண்டு கைகளில் திருவோடு ஏந்தி வழியெங்கும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தவாறு கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று, கூடுதல் ஆட்சியர் வாசுதேவனிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    செய்தியாளர்: கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: