அடுத்த முறை முன்னாள் எம்எல்ஏவாக ஆகிவிடுவோமோ என்னவோ.. துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை!!

அமைச்சர் துரைமுருகன்

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த விதிமுறைகளுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டங்களுக்கு செலவிடலாம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  • Share this:
    அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வு பொதுவாக கூட்டத்தொடரில் பேசப்படும் என்றாலும், இந்த நேரத்தில் பேசுவது சரியாக இருக்குமா என்பதை உறுப்பினர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் கொரோனா மூன்றாவது அலை வருமென கூறப்பட்டுள்ளது. எனவே அதை அறிந்து உங்கள் மனசாட்சிப்படி இது நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும், ஆறு மாதம் முடிந்தபின் அடுத்த நிதியாண்டில் நிச்சயம் சம்பளம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை, தொகுதியின் தேவைக்கு ஏற்ப விதிமுறைகளின்றி செலவிட முதல்வர் அனுமதிக்க வேண்டுமென்றார்.

    முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதிய தொகை அதிகரித்து வழங்க வேண்டுமெனவும், யாருக்கு தெரியும் அடுத்த முறை முன்னாள் எம்எல்ஏவாக ஆகிவிடுவோமோ என்னவோ, என தெரிவித்தால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    தொடர்ந்து பேசிய முதலமைச்சர், முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதிய தொகையை அதிகரிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கு, தொகுதியின் தேவைக்கு ஏற்ப தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த விதிமுறைகளும் இன்றி செலவழிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவை முன்னவர், அதிகாரிகளுக்கு வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு (சைரன்) வழங்கப்படுவது போல, அமைச்சர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    Also read: பின்னணியில் ’கவுண்டிங் மிஷின்’.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை.. வானதி சீனிவாசன் விளக்கம்!!

    ஆய்வுப் பணிக்கு செல்லும்போது அதிகாரிகளின் வாகனங்களில் சுழல் விளக்குகள் இருப்பதால், அவர்களால் எளிதில் சென்றுவிட முடிவதாகவும், அமைச்சர்களின் வாகனங்களில் சுழல் விளக்கு இல்லாததாலும் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுவதாகவும் கூறினார்.

    அனைவரின் வாகனங்கள் இருந்தும் சைரனை எடுத்துவிட வேண்டும் அல்லது அமைச்சர்களின் வாகனங்களுக்கு சுழல் விளக்குகள்(சைரன்) வழங்கப்பட வேண்டும், என பேரவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார்.

    இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: