முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடிகைகளை விருந்தாக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன் - தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்

நடிகைகளை விருந்தாக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன் - தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்

தயாரிப்பாளர் மீது இயக்குநர் புகார்

தயாரிப்பாளர் மீது இயக்குநர் புகார்

தயாரிப்பாளரின் ஆசையை நிறைவேற்றாததால் மாயமுகி படத்தில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இயக்குநர்.

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகைகளை தயாரிப்பாளரின் பாலியல் தேவைகளுக்கு  அழைத்துச் செல்லாததால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இயக்குநர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மாயமுகி என்ற திரைப்படத்தை ரவிச்சந்திரன் என்பவர் இயக்குவதாகவும்  அதை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர் தயாரிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்புகள் கடந்த 2019ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அதில் கதாநாயகியாக மனோ சித்தராவும், கதாநாயகனாக ராஜா தேவூ நடித்து வந்துள்ளனர்.

Also Read: மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்

படப்பிடிப்பின் வேலைகள் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலத்தில் இயக்குநர் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்களை தயாரிப்பாளர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் , மேலும் படத்தின் மீதி பகுதியை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கி வருவதாகவும் படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து இயக்குநரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, "படத்தின் வேலைகள் 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் படத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை தயாரிப்பாளர் திருடிச் சென்று விட்டதாகவும் மேலும் தன்னுடைய படத்தில் வைக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகள் மற்றும்  கதையின் சில பகுதிகளை எடுத்து வேறு படத்திற்காக தயாரிப்பாளர் டெல்லி பாபு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Also Read: மாடர்ன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை - வைரல் வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, படத்தில் நடிக்க கூடிய கதாநாயகி மற்றும் துணை நடிகைகளை தயாரிப்பாளரின் பாலியல் தேவைகளுக்கு தான் அழைத்துச் செல்லாததால் மாயமுகி படத்தில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன்.

இதே போன்று இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியஜெயபாலா, கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி மாயமுகி படத்திற்காக போடப்பட்ட இசை ஹார்ட் டிஸ்க்குகளை தயாரிப்பாளர் டெல்லி பாபு திருடிச் சென்று விட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actor, Actress, Crime | குற்றச் செய்திகள், Director, Tamil cinema Producer council