வேலுர் மாவட்டத் தேர்தல் ரத்து? குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியதாக தகவல்

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர்.

வேலுர் மாவட்டத் தேர்தல் ரத்து? குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியதாக தகவல்
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: April 15, 2019, 11:05 PM IST
  • Share this:
வேலூர் மாவட்டத்தில் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கேட்டு தேர்தல் ஆணையம் கோப்பு அனுப்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து, வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதி தேர்தல், சட்டமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர். அப்போது, துரை முருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர்.

பின்னர், இரு தினங்கள் கழித்து ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. 10 கோடி ரூபாய் வரை பணம் சிக்கியதாக கூறப்பட்டது.


அதனையடுத்து, பணம் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, ஆர்.கே.நகரைப் போல தேர்தல் ஒத்திவைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், வேலூர் மாவட்ட மக்களவைத் தொகுதி மற்றும் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்வதற்கு தமிழகத் தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. அதன்அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம், வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்