ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்- ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தகவல்

இது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்- ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தகவல்

ஜெயலலிதா

ஜெயலலிதா

ரிச்சர்டு பீலே ஆஞ்சியோ தற்போது தேவையில்லை என கூறியதால் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாததே அவரின் மரணத்திற்கு காரணமானது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே பரிந்துரையின் படி ஜெயலலிதாவுக்கு கடைசிவரை ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படாததே அவரது மறைவுக்கு காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சைபெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு முதன்முறையாக வந்த ரிச்சர்டு பீலே வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது குறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் அமெரிக்க மருத்துவர், சமீன் சர்மா ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் ரிச்சர்டு பீலே ஆஞ்சியோ தற்போது தேவையில்லை என கூறியதால் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாததே அவரின் மரணத்திற்கு காரணமானது என ஆறுமுகசாமி அறிக்கை தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவுக்கு 2 கோடியே 21 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருப்பது ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் முழு அறிக்கை 

மேலும், “ ஜெயலலிதாவுக்கு இதயத்தில் வெஜிடேசன் 14 மி.மீக்கு மேல் உள்ளது என்பது தெளிவாக உள்ளது. ஆறு வாரங்களுக்கும் மேலாக மருந்துகள் அளிக்கப்பட்ட போதிலும் அது குணமாகவில்லை என்றும் , நுரையீரலில் திரவ சேகரிப்பு அப்படியே இருந்தது என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவில் விதிமுறை மீறல்... அதிகளவில் கேக், இனிப்பு சாப்பிட்டதால் உடல்நலம் மோசமடைந்தது

நிலையான மருத்துவ நெறிமுறைகளின்படி அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து வெஜிடேசனை அகற்றவும் பெர்ஃபொசேரனை மூடியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். இது நடந்திருந்தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிலாம்’ என ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

Published by:Murugesh M
First published: