இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யலாம் - உயர் நீதிமன்றம்

news18
Updated: February 13, 2018, 1:56 PM IST
இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யலாம் - உயர் நீதிமன்றம்
இயக்குநர் பாரதிராஜா
news18
Updated: February 13, 2018, 1:56 PM IST
இரு பிரிவினருக்கிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது தொடரப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி 18ஆம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்து மத கடவுளான விநாயகரை , இறக்குமதி கடவுள் என விமர்சித்தார்.

மேலும் ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையெடுக்கவும் தயங்க மாட்டோம் எனவும் அவர் பேசினார்.

இதனையடுத்து, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் தேதி இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநர் பாரதிராஜா மீதான புகாரை விசாரிக்க வேண்டும் எனவும், புகாரில் முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்