தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

வெயில் (கோப்பு படம்)

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.

  • Share this:
    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைபுகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    30.03.2021 முதல் 02.04.2021 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

    வரும் ஏப்ரல் 2 முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் கார்ற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக 29.03.2021: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    30.03.2021 : தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

    31.03.2021: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியானது (upto 5.8 km) அடுத்த 24 மணிநேரத்தில் காற்றாழ்த்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக 29.03.2021& 30.03.2021: தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Vijay R
    First published: