கிருமிநாசினி, முகக்கவசம் உட்பட 15 பொருட்களுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்: தமிழக அரசு உத்தரவு

கிருமிநாசினி, முகக்கவசம் உட்பட 15 பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

மருத்துவர்கள், செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான விலை 273 ரூபாயாகவும் அரசு விலை நிர்ணயித்துள்ளது.

 • Share this:
  கிருமிநாசினி, முகக்கவசம் உட்பட 15 பொருட்களுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகீன்றனர். அத்துடன், அனைவரும் பொது வெளியில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இவற்றுக்கான தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு சந்தையில் அதிக விலைக்கு கிருமி நாசினி, முகக் கவசம் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

  Also read: கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்

  இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, 200 மில்லி கொண்ட கிருமிநாசினியின் விலை 110 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று, N-95 முகக்கவசத்தின் அதிகபட்ச விலை ரூ.22 என்றும், மூன்று அடுக்கு கொண்ட சாதாரண முகக் கவசம் 4 ரூபாய் 50 காசு எனவும் முகத்தை பிளாஸ்டிக் கவர் போன்று மறைக்க பயன்படும் ஃபேஸ் ஷீல்டு ஒன்று 21 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதேபோன்று, மருத்துவர்கள், செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான விலை 273 ரூபாயாகவும் அரசு விலை நிர்ணயித்துள்ளது.

  மேலும், ஹியூமிடைஃபருடன் கூடிய ஃப்ளோ மீட்டர் ஆயிரத்து 520 ஆகவும், கை விரலில் வைத்து ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் "பிங்கர்டிப் பல்ஸ் ஆக்சிமீட்டர்" விலை அதிகபட்சமாக ஆயிரத்து 500 ரூபாய் எனவும் அரசு விலை நிர்ணயித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: