Mattu Pongal 2020 | தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலகல கொண்டாட்டம்!

Mattu Pongal 2020 | தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை கோலகல கொண்டாட்டம்!
  • Share this:
மாட்டுப் பொங்கலை ஒட்டி, விவசாயிகள் தங்களது வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். இரண்டாம் நாளில் வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் படையலிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன், விவசாயிகள் தங்களது உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அத்துடன், கோவில்களில் உள்ள கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.


First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்