Home /News /tamil-nadu /

கோடநாடு எஸ்டேட் கொலையில் முதல்வருக்கு தொடர்பு...? தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூவிற்கு பேசத் தடை!

கோடநாடு எஸ்டேட் கொலையில் முதல்வருக்கு தொடர்பு...? தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூவிற்கு பேசத் தடை!

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூ

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூ

  • News18
  • Last Updated :
    கோடநாடு எஸ்டேட் கொலையில் முதல்வருக்கு தொடர்பு உள்ளதாக மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சயன், வாளையார் மனோஜ் ஆகிய இருவர் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து மேத்யூஸ் உட்பட ஏழு பேருக்கு எதிராக முதலமைச்சர் பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி கே. கல்யாணசுந்தரம், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக பேசவும், தவறான ஆதாரங்களை வெளியிடவும் 7 பேருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி