• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை இருமடங்கு உயர்வு!

டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை இருமடங்கு உயர்வு!

தீப்பெட்டி

தீப்பெட்டி

டிசம்பர் முதல் தீப்பெட்டி விலை  1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்கிறது.

  • Share this:
    தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் ஆகிய இடங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான அட்டை,பேப்பார், மெழுகு, குளோரைட், பாஸ்பரஸ் முக்கிய மூலப்பொருள்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ 410ல் இருந்து 850 ரூ உயர்ந்துள்ளது. இதே போன்று மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாய் உயர்ந்துள்ளது. குளோரைட் 70 ரூபாயில் இருந்து ரூ 82ம், அட்டை 42 ரூபாயில் இருந்து 55ரூ ம் உயர்ந்துள்ளது.

    Also Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்

    இது தவிர பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் வரும் டிசம்பர் 1ந்தேதி முதல் தீப்பெட்டி விலை உயர்வினை அதிகரிக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: