தூத்துக்குடி,
விருதுநகர்,
தென்காசி,
வேலூர்,
கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த மூன்று மாதங்களில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை 300 ரூபாயில் இருந்து 350-ஆக உயர்த்த முடிவு செய்தனர். இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று முதல் 17ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Must Read : உதவி பேராசியர் மீது பாலியல், தீண்டாமை புகார்.. ஆதரவாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை
இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் லைட்டரால், தீப்பெட்டி விற்பனை 30 சதவீதம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.