வடமாநிலங்களில் தொடரும் கனமழை - கோவில்பட்டியில் ₹ 200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

வடமாநிலங்களில் தொடரும் கனமழை - கோவில்பட்டியில் ₹ 200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

ரூ.200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக லாரி போக்குவரத்து தடைப்பட்டு உள்ளதால் கோவில்பட்டி பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய நகரமாக விளங்குவது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி தான். கொரோனா ஊரடங்கு காரணமாக  தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த பின்னர் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி அரசு விதிமுறைகளை பின்பற்றி தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தினமும் சுமார் 200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பண்டல்கள் அஸ்ஸாம், புதுடெல்லி, ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், வடமாநிலங்களில் லாரி போக்குவரத்து  தடை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ 200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், கொரோனா ஊரடங்கு பின்னர் தற்போது மெல்ல மெல்ல தீப்பெட்டி தொழில் சகஜ நிலைக்கு திரும்பி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் வட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக போக்குவரத்து தடைபட்டு உள்ளதால் தீப்பெட்டி பண்டல்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

தீப்பெட்டி மூலப்பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. ஆனால் விற்பனையை அதிகரிக்காத நிலையில் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழையினால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளது சிறு பின்னடைவுதான் என்றாலும் இருந்தாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் வகையில் நாங்கள் உற்பத்தி நிறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

Also read... வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக தங்களது வாழ்வாதரம் பாதித்த நிலையில் தற்பொழுது வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் தீப்பெட்டி பண்டல்கள் கொண்டு செல்லமுடியாத காரணத்தினால் தாங்கள் வேலையிழந்துள்ளதாகவும், தங்களுடைய வாழ்வாதரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் லாரி டிரைவர் காளிதாஸ்
Published by:Vinothini Aandisamy
First published: