• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பக்ரீத் பண்டிகைக்காக குவிந்த ஆடுகள்: கூட்டு குர்பானி தடையால் வீட்டு வாசல்களில் கட்டிவைக்கப்படும் நிலை..

பக்ரீத் பண்டிகைக்காக குவிந்த ஆடுகள்: கூட்டு குர்பானி தடையால் வீட்டு வாசல்களில் கட்டிவைக்கப்படும் நிலை..

கூட்டு குர்பானி தடை

கூட்டு குர்பானி தடை

ஆடுகள் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில் கூட்டு குர்பானி இல்லாததால் வீட்டு குர்பானி கொடுப்பதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ஆடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

  • Share this:
பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில் கூட்டு குர்பானி இல்லாததால் வீட்டு குர்பானி கொடுப்பதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ஆடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை இன்றைய தினம் இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஆடு ,மாடு உள்ளிட்டவற்றை கூட்டு குர்பானி கொடுப்பது வழக்கமான ஒன்றாகும்.

கொரோனா ஊரடங்கு காரணமாகவும் நீதிமன்ற உத்தரவுபடி யும் கூட்டுக் குர்பானிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரவர் வீடுகளில் எளியவர்களுக்கு குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை நேற்று இரவு முழுவதும் வாங்கினர். இந்தாண்டு வீட்டு குர்பானி என்பதால் மதுரை காஜிமார் தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆடு வாங்கப்பட்டு கட்டிப் போடப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க:  பக்ரீத்: தடையை மீறி ஒட்டகங்கள் ஏற்றி வரப்படுகிறதா? வாகனங்களைக் கண்காணிக்குமாறு உத்தரவு..

இன்று காலை அவை அனைத்தும் குர்பானி தரப்பட இருக்கும் நிலையில் நேற்றிரவு முழுவதும் ஆடுகளை அலங்கரித்து சிறுவர்கள் தெருக்களில் ஆர்வமுடன் அழைத்துச் சென்றனர். கொரோனா காலமாக இருந்தாலும் ஆடு வளர்ப்போருக்கு உதவும் வகையில் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் தமிழகம் முழுவதும் நடந்துள்ளதாக இஸ்லாமிய பதிப்பகம் மற்றும் ஆய்வு மையத்தின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்  அப்துல் காதிர் உமரீ தெரிவித்தார். மேலும் பக்ரீத் அன்று எதற்காக குர்பானி தரப்படுகிறது என்பது குறித்தும் அவர் விளக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: