ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘என்ஜிகே’ மாஸ் கட் அவுட்... கொண்டாட்டத்தில் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்!

‘என்ஜிகே’ மாஸ் கட் அவுட்... கொண்டாட்டத்தில் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்!

ழுழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

ழுழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

ழுழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

 • 1 minute read
 • Last Updated :

  என்ஜிகே படம் மே 31-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சூர்யாவுக்கு 215 அடியில் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

  இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை  எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

  படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், சூர்யா ரசிகர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால், படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் ரிலீஸ் என்றாலே பேனர், கவுட் அட் என கலைகட்டும் நிலையில் சூர்யாவுக்கு விருந்தளிக்கும் விதமாக இதுவரை யாருக்கும் வைக்காத உயரத்திற்கு கட் அவுட் வைக்க ரசிகர்கள் திட்டமிட்டனர்.

  அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் சூர்யாவுக்கு 215 அடியில் கட் அவுட் வைக்க திட்டமிட்டு சூர்யா ரசிகர்கள் சில தினங்களுக்கு முன் பூஜையுடன் வேலைகளை தொடங்கினர். தற்போது அந்த பணி முடிந்து கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

  இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித்திற்கு 190 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூர்யா ரசிகர்கள் 215 அடிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த கட் அவுட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Also watch

  First published: