Home » News » Tamil-nadu » MASINAGUDI WILD ELEPHANT FIRE ISSUE RESORT SEALED VJR

மசினகுடியில் காட்டு யானைக்கு தீவைக்கப்பட்ட கொடூரம்.. சம்மந்தப்பட்ட ரிசார்ட்க்கு சீல் வைப்பு

காயங்கள் உடன் சுற்றி திரிந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

மசினகுடியில் காட்டு யானைக்கு தீவைக்கப்பட்ட கொடூரம்.. சம்மந்தப்பட்ட ரிசார்ட்க்கு சீல் வைப்பு
வீடியோ காட்சிகள்
  • Share this:
உதகை அருகே மசினகுடி பகுதியில் 50 வயது மதிக்கதக்க ஆண் யானை மீது தீவைத்த சம்பவத்தில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதிக்கு வந்த சுமார் 50 வயது மிக்க காட்டு யானையை விரட்ட ஊழியர்கள் அதன் மீது தீவைத்துள்ளனர். இதனால் காட்டு யானையின் தலை மற்றும் காது பகுதிகளில் தீப்பிடித்ததால் காட்டு யானை அலறி அடித்து ஓட்டம் பிடித்தது.

காட்டு யானை மீது தீ வைக்கப்பட்டதில் தலை மற்றும் காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காயங்கள் உடன் சுற்றி திரிந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.




இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரசாத்(36) மற்றும் ரேமண்ட் டீன் (28) ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காட்டு யானையை விரட்ட தீவைத்து துணியை அதன் மீது வீசியதை விசாரணையில் ஓப்புக் கொண்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை வனத்துறை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யபட்ட ரேமண்ட் டீன் மற்றும் அவரது அண்ணன் ரிக்கி ரேயான் ஆகியோர் விதி மீறிய கட்டிடத்தில் நடத்தி வந்த 3 விடுதி அறைகளுக்கு கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன் மற்றும் மசினகுடி ஊராட்சி செயலாளர் கிரண் ஆகியோர் போலிஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
First published: January 22, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories