• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மசினக்குடி புலி மயக்க ஊசிக்கு மடங்கியது..

மசினக்குடி புலி மயக்க ஊசிக்கு மடங்கியது..

 மசினக்குடி புலி மயக்க ஊசிக்கு மடங்கியது..

மசினக்குடி புலி மயக்க ஊசிக்கு மடங்கியது..

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் T23 புலி பிடிப்பட்ட நிலையில் மசினகுடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உயிருடன் புலியை பிடித்த வனத்துறையின் நடவடிக்கைக்கு வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே 21 நாட்களாக வனத்துறையிடம் சிக்காமல் இருந்த T23 புலி இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இன்று காலை மசினகுடி சோதனை சாவடி அருகே T23 புலி தென்பட்ட நிலையில் புலி சென்ற பாதையில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, கூட்டுப்பாறை என்ற இடத்தில் புலி இருப்பது தெரியவந்த நிலையில் உடனடியாக மருத்துவகுழுவினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். புலி மயக்கமடைந்த நிலையில் உடனடியாக அதை தூக்கி இரும்பு கூண்டில் அடைத்தனர்.

    இந்நிலையில், புலி பிடிபட்ட தகவல் கேட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருபத்தி ஒரு நாட்களாக புலியை தேடி வந்த நிலையில் தற்போது புலி பிடிபட்டு இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மசனக்குடி கிராம மக்கள் தெரிவித்தனர். அச்சத்துடனேயே இருந்த நிலையில் தற்போது இந்த அச்சம் விலகி இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

    புலியை உயிருடன் பிடித்தற்கு வன ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். புலியை பிடிக்க மேற்கொண்ட முயற்சி நல்ல அனுபவமாக இருந்தது எனவும் இது போன்று பிடிக்கப்படும் வன உயிர்களை பாதுகாக்க தனியாக மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும், வன உயிர்களை வேறு இடத்தில் வைத்து பராமரித்து அவற்றை மற்ற பகுதிகளில் விடுவித்தால் அவை தங்களது வாழ்வை தகவமைத்து கொள்ளும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    முதல் முறையாக உயிருடன் புலி பிடிபட்டது இதுதான் முதல் முறையாக இருக்கும் என கருதுவதாக தெரிவிக்கும் வன ஆர்வலர்கள், 21 நாட்கள் போராடி வனத்துறையினர் புலியை பிடித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: