HOME»NEWS»TAMIL-NADU»masinagudi an elephant was set on fire by a resort employees in nilgiris vjr

EXCLUSIVE: மசினகுடியில் காட்டு யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்...

இந்த சம்பவத்தால் காது பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது,

  • Share this:

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே காட்டு யானை மீது எரியும் டயர் வீசிய அதிர்ச்சிக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

மசினகுடியில் தனியார் ரிசார்ட் பகுதியிக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை விரட்ட சொகுசு விடுதி ஊழியர்கள் டயரை பற்ற வைத்து அதனை காட்டு யானை மீது வீசி உள்ளனர்.  இதனால் யானையின் தலை, காதுப் பகுதியில் எரிந்த யர் விழுந்து தீ பிடித்ததால் யானை அலறி அடித்து கொண்டு பரிதாபமாக ஓடியது.





இந்த சம்பவத்தால் காது பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது,  யானை உயிரிழந்ததை அடுத்து தனிப்படையினர்  இருவரை கைது செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த தகவல் தெரிவித்துள்ளார்.

 
Published by:Vijay R
First published: