ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் தேரோட்டம்!

மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்வேறு ஊர்களில் இருந்தும் மாசி மகத் திருவிழாவை கொண்டாடுவதற்காக கோவிலுக்கு வந்திருந்தனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  திருச்செந்தூரில் மாசித் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி வீதி உலா நடைபெற்றது. 10-ம் நாளான இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  பின்னர், குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 4 வீதிகள் வழியாக வலம் வந்த தேரை, திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசித்தனர்.

  பல்வேறு ஊர்களில் இருந்தும் மாசி மக திருவிழாவை கொண்டாடுவதற்காக பல்லாயிரக்கணக்கான இருளர் பழங்குடி இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர்.

  இவர்களின் பாரம்பரிய திருவிழாவாக கருதப்படும் இந்த மாசி மகத்தையொட்டி, நள்ளிரவிலேயே கூடாரங்கள் அமைத்து கடற்கரையில் தங்கினர். அதிகாலையில் எழுந்து கன்னியம்மனை வழிபட்ட இவர்கள், பாரம்பரிய முறைப்படி திருமணத்திற்கு பெண் பார்ப்பது போன்ற நிகழ்வுகளிலும் ஈடுபட்டனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Tiruchendur