ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

சிபிஎம்

சிபிஎம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளன. தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தநிலையில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை கீழ்வேளூர்(த) தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ நாகை மாலியும், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.கே.பொண்ணுத்தாய், தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதியில் கே.சீனிவாசன், புதுக்கோட்டை கந்தவர்கோட்டை(த) தொகுதியில் சின்னதுரை, தர்மபுரி அரூர்(த) தொகுதியில் குமார், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘தி.மு.க வாக்குறுதிகளையும் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். எல்லா தலைவர்களும், எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வோம். எதிர்கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் அதிகமாக வழக்குப் பதிவு செய்கிறது. ஆளும் கட்சி அதிகமான விதிமீறல்களைச் செய்கிறது. அதனை மீறி தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்’ என்று தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Candidates, Marxist Communist Party, TN Assembly Election 2021