ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூக்குமேடை பாலு நினைவு படிப்பகத்தை இடித்து ஆக்கிரமிக்கிறார்: மதுரை திமுக பிரமுகர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார்

தூக்குமேடை பாலு நினைவு படிப்பகத்தை இடித்து ஆக்கிரமிக்கிறார்: மதுரை திமுக பிரமுகர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார்

மதுரை பாலு படிப்பகம்

மதுரை பாலு படிப்பகம்

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் படிப்பகத்தை  இடித்தாக தி.மு.க பிரமுகர் மீது முதல்வர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை ஆரப்பாளையம் அருகே மேலபொன்னகரம் பகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறைந்த தியாகி   'தூக்குமேடை' பாலு என்பவரின் நினைவு படிப்பகத்தை அமைத்து பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் அந்த பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்துடன் இடித்ததாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து இதற்கு காரணமான தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் தனி பிரிவிற்கும், கரிமேடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய சிபிஎம் பகுதி செயலாளர் ஸ்டாலின், ‘மக்களுக்காக போராடி தூக்குமேடையேறி உயிர்த்தியாகம் செய்த தோழர் பாலுவின் நினைவாக கரிமேடு 13 வது வார்டில் படிப்பகம் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இதனை இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.கவின் முன்னாள் பகுதிச் செயலாளர் ஒச்சு பாலு இந்த படிப்பகத்தை அகற்ற முயற்சிகள் எடுத்து வந்தார். ஏற்கனவே அவருடைய நடவடிக்கைகளால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் எனவும், அவர்மீது நில ஆக்கிரமிப்பு என்று பல புகார்கள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த படிப்பகம் இந்த பகுதியில் செயல்பட்டு வருவது அவருக்கு இடைஞ்சலாக இருப்பதால் அவருடைய ஆட்கள் மூலம் இடித்துள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் புகார் கொடுத்துள்ளோம். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார். கூட்டணிக் கட்சியான சிபிஎம், திமுக பிரமுகர் மீது புகார் எழுப்பியுள்ளது மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: DMK, Madurai, Marxist Communist Party