Home /News /tamil-nadu /

அதிமுக ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு... நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்

அதிமுக ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு... நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகல்

மருது அழகுராஜ்

மருது அழகுராஜ்

நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

    அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவரும் சூழலில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார்.

    அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ், ஜெயலலிதா உயிரிழந்த பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு நமது எம்ஜிஆர் நாளிதழ் சென்றது. இந்நிலையில், , சித்திரகுப்தன் எனும் புனைபெயரில் "காவி அடி, கழகத்தை அழி" என்ற கவிதையை மருது அழகுராஜ் நமது எம்ஜிஆர் நாளிதழில் எழுதியிருந்தார்.

    இதையடுத்து, அவர் நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கைக்கு அதிமுக சென்ற பின்னர் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியராக மருது அழகுராஜ் இருந்து வந்தார். 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழு தீர்மானம் - இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்

    தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், எந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்காமல் மருது அழகுராஜ் நடுநிலை வகித்து வந்தார். இந்நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்... சுயேட்சை சின்னத்தில் போட்டி?

    இந்த சூழலில், நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரித்துவரும் சூழலில் அதனை எதிர்ப்பு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியர் பதவி விலகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Namathu amma, OPS - EPS

    அடுத்த செய்தி