MARRIED WOMAN SEXUALLY HARASSED FOR TAKING VIDEO WHILE BATHING IN VILLUPURAM VAI
குளிக்கும்போது வீடியோ எடுத்து திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. போலீசில் புகார் செய்த பெண்
மாதிரிப்படம்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே குளிக்கும்போது வீடியோ எடுத்து திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள சு.கொள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆனந்தன் - உமா தம்பதியினர். வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்துள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் வெங்கடேசன் என்பவர் உமா குளிக்கும்போது அருடைய வீட்டின் மேல் இருந்து தொலைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோவை உமாவிடம் காட்டி ஆசைக்கு இனங்குபடி கூறி கடந்த மூன்று மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உமா நடந்தவற்றை கணவர் ஆனந்தனிடன் கூறியுள்ளார். இதுகுறித்து ஆனந்தன் சென்று கேட்டதற்கு வெங்கடேசன், அவரது தந்தை செல்வராஜ், அண்ணன் ரஞ்சித்குமார் ஆகியோர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனதால் பதிக்கப்பட்ட பெண் கணவருடன் இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு இணங்க மறுக்கும் பட்சத்தில், ஆபாச விடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.