சாதியைக் கூட பார்க்கலை சார்.. அவர் வயசு என்ன?, என் பொண்ணு வயசு என்ன...? எம்.எல்.ஏ. திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் வேதனை

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தங்கள் மகளை கடத்தி சென்று திருமணம் செய்துக்கொண்டதாக, பெண்ணின் தந்தை சாமிநாதன் என்பவர் தெரிவித்துள்ளார்.

சாதியைக் கூட பார்க்கலை சார்.. அவர் வயசு என்ன?, என் பொண்ணு வயசு என்ன...? எம்.எல்.ஏ. திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் வேதனை
எம்.எல்.ஏ. பிரபு திருமணம் - பெண்ணின் தந்தை
  • Share this:
38 வயதான கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவும் தியாகதுருகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணத்துக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல் இருந்தனர். இன்று காலை சௌந்தர்யாவை பிரபு தனது இல்லத்தில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தங்கள் மகளை பிரபு கடத்திச் சென்றுவிட்டதாகவும், புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக பிரபுவின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும் சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் கூறியுள்ளார். மேலும் தான் ஒரு எம்எல்ஏ என்பதால் புகார் அளித்தாலும் தன்னை ஏதும் செய்ய முடியாது என்று பிரபு மிரட்டுவதாக சாமிநாதன் புகார் தெரிவிக்கிறார்.

பிரபு மீது புகார் அளித்தால் சபாநாயகர் உத்தரவு இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என மிரட்டுவதாகவும், தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவை தங்களது பிள்ளையைப் போல் நினைத்து பழகி வந்ததாகவும் 38 வயது ஆன அவர் தங்களது 19-வயது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், மேலும் எம்.எல்.ஏ - வின் ஆட்கள் மற்றும் அ.ம.மு.க மாவட்ட செயலாளர் கோமுகி மணியன் ஆகியோர் மிரட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், தாங்கள் சாதி, மதம் கூட பார்க்கவில்லை என்றும், வயது வித்தியாசம் கவலை அளிப்பதாகவும் சாமிநாதன் தெரிவித்தார்.இந்நிலையில், பெண்ணின் தந்தை சாமிநாதன் தீக்குளிக்க முயற்சித்த போது தியாகதுருகம் போலீசார் தடுத்து நிறுத்தி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

எம்.எல்.ஏ. விளக்கம்:

நான்கு மாதங்களாக காதலித்து வந்ததாகவும், பெண்ணின் சம்மதத்துடனே திருமணம் செய்துக்கொண்டதாக நியூஸ் 18க்கு பிரேத்யேக பேட்டியளித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார். அதேபோல், தனது முழு விருப்பத்துடனே இந்த திருமணம் நடைபெற்றதாக சவுந்தர்யா கூறினார்.

திருமண புகைப்படங்கள்:யார் இந்த எம்.எல்.ஏ.?

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவான பிரபு, கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு, தேர்வு செய்யப்பட்டார். பட்டதாரி இளைஞரான இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தார். கள்ளக்குறிச்சி தனி மாவட்டக் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, அந்த அணியில் இருந்து விலகி டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் அதிமுகவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
First published: October 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading