மணப்பெண்ணை ஏற்கிறேன்: CAA-வை நிராகரிக்கிறேன்! வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் நடைபெற்றத் திருமணம்

மணப்பெண்ணை ஏற்கிறேன்: CAA-வை நிராகரிக்கிறேன்! வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் நடைபெற்றத் திருமணம்
சி.ஏ.ஏவுக்கு எதிராக தம்பதி
  • Share this:
சென்னையிலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் தம்பதிகளுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், NRC, NPR உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்த்தும் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் இசுலாமிய அமைப்புகள் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் கைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக NO- CAA, NRC, NPR என தங்களின் கண்டங்களை மெஹந்தி இட்டும் தெரிவித்துவருகின்றனர்.
இன்று நடக்கும் சட்டசபை பட்ஜெட் விவாதத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரின் இல்லத் திருமணம் இன்று நடைபெற இருந்தது.

ஆனால் இந்த போராட்டத்தின் காரணமாக ஷயின்ஷா, சுமையா தம்பதிக்கு நடைபெறவிருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், இங்குள்ள போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் அறிவுறுத்தலின்படி மணமக்களுக்கு போராட்டக்களத்தில்  இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று பொது மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.Also see:


 
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்