சிதம்பரம் நடராஜர் கோயிலில் பட்டாசு அதிபர் வீட்டு திருமணம்: சர்ச்சையில் கோயில் நிர்வாகம்

News18 Tamil
Updated: September 13, 2019, 1:41 PM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பட்டாசு அதிபர் வீட்டு திருமணம்: சர்ச்சையில் கோயில் நிர்வாகம்
News18 Tamil
Updated: September 13, 2019, 1:41 PM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வெகு விமர்சையாக தொழிலதிபர் வீட்டு திருமணம் நடந்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயிலில் வழக்கமாக, சிவகாமி மற்றும் முருகன் சன்னதியில்தான் திருமணங்கள் நடத்தப்படும். ராஜ சபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆன்மீக நிகழ்சிகள் தவிர மற்ற நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று சிவகாசி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் இல்ல திருமண விழா ஆயிரம்கால் மண்டபத்தில் நடந்துள்ளது. இதற்காக, ஆயிரம்கால் மண்டபம் மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள் ஆகியவற்றால் நட்சத்திர ஓட்டலை போல பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

திருமண பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. புனிதமாக கருதப்படும், கோயிலின் மையப்பகுதியில் உள்ள விமானத்தின் மீது ஏறி, சிலர் பூ அலங்காரம். செய்யும் காட்சிகளும் வெளியானது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நியூஸ்18 சார்பில் விழா ஏற்பாட்டாளரான தீட்சிதர் பட்டுவை தொடர்பு கொண்டோம். கோயில் வளாகத்தில் உள்ள சிறு தெய்வங்களுக்கு நேற்று குடமுழுக்கு நடைபெற்றதால், அந்நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆயிரங்கால் மண்டபத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதேநேரம் நியூஸ்18 -க்கு தொலைபேசியில் பேசிய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணத்திற்கு அனுமதித்த தீட்சிதர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...