ஓராண்டு முடிந்து குழந்தையும் பிறந்தாச்சு - திருமண நிதியுதவி & தாலிக்கு தங்கம் வந்து சேரவில்லை

ஓராண்டு முடிந்து குழந்தையும் பிறந்தாச்சு - திருமண நிதியுதவி & தாலிக்கு தங்கம் வந்து சேரவில்லை

News 18

திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு ஓராண்டு கழிந்தும் தீர்வு கிடைக்கப்படாமல் உள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண  நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர்  முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர்  தர்மாம்பாள் அம்மையார்  நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின்  மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் இத்திட்டத்துடன் தாலிக்கும் தங்கம் என்ற பெயரில் தங்கம் வழங்கும் திட்டத்தினை கடந்த 2011-ல் தொடங்கி வைத்தார். உயர்கல்வி பயின்ற பெண்களுக்கு 25 ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரமும், இதனுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தப்பட்டது. திருமணத்திற்கு 15 நாளுக்கு முன்னர் மணப்பெண்ணின் பெற்றோர், இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். திருமணம் முடிந்ததும், அதனை பதிவு செய்து பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது தான் அதற்கான நடைமுறைகளாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றிய  அலுவலகங்களில் பணியாற்றும் சமூகநல அலுவலர்கள் மூலம் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் மூலமாக பல ஏழை, எளிய மக்கள் மிகவும் பயன்பெற்று  வந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் திருமணம் முடிந்த உடன் வழங்கப்பட்டு வந்த பணம் மற்றும் தங்கம் காலப்போக்கில் 3 மாதம், 6 மாதம் அல்லது ஓராண்டு கழித்து வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணம், தங்கம் எதுவும் வழங்கப்படமால் இருப்பது பொது மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் 403 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருமண உதவித்தொகைக்காக விண்ணப்பம் செய்யதுள்ளனர். 2017 டிசம்பர் மாதத்திற்கு பின்னர் மாவட்டத்தில் திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் எதுவும் வழங்கப்படவில்லை. இதில் விண்ணப்பம் செய்த பலருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளும் பிறந்த நிலையில் தற்பொழுது வரை இவர்களுக்கு கிடைக்கவிலை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

News 18


தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, கடன் வாங்கி திருமண ஏற்பாடு செய்த தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பம் செய்ததாகவும், தனக்கும் திருமணம் முடிந்து, தற்பொழுது குழந்தையும் பிறந்து விட்டது. இதுவரை உதவி தொகை மற்றும் தங்கம் கிடைக்கவில்லை என்றும், தனது தந்தை தொடர்ந்து நடையா நடையாக நடந்து வருவதாகவும், உதவி தொகை கிடைத்தால் அவருடைய கடனை அடைக்க உதவியாக இருக்கும் என்று கூறுகிறார் முனிதா

ஏற்கனவே திருமணம் செய்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருமண உதவி தொகை மற்றும் தங்கம் கிடைக்கமால் மக்கள் காத்திருக்கும் நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்தவர்கள் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியமால் தவித்து வருகின்றனர். அவர்கள் விண்ணப்பம் செய்ய 3 மாத கால அவகாசம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழக அரசு நிலுவையில் விண்ணப்பங்களுக்கு திருமண உதவி தொகை மற்றும் தங்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற திருமணம் செய்தவர்கள் விண்ணப்பிக்க கூடுதலாக 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

இது குறித்து சமூகநலத்துறையினை சேர்ந்த அதிகாரிகளிடம் கேட்ட போது ஏற்கனவே விண்ணப்பம் செய்த அனைத்து விண்ணப்பங்களும் ஆய்வு செய்யபட்டு தயராக இருப்பதாகவும், கொரோனா காலத்தில் திருமணம் செய்தவர்கள் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் தருவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published: