ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கெட்டுப்போன இறைச்சியால் திருமணம் நிறுத்தம்..3600 கிலோ மட்டன், சிக்கன் பறிமுதல்

கெட்டுப்போன இறைச்சியால் திருமணம் நிறுத்தம்..3600 கிலோ மட்டன், சிக்கன் பறிமுதல்

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து 3.5 டன் ஆடு, 12 ஆயிரம் சிக்கன் லெக் பீஸ் எடுத்து வரப்பட்டுள்ளது. இறைச்சி கெட்டுப்போய் இருப்பதை கண்ட திருமண வீட்டார் திருமணத்தை ரத்து செய்துவிட்டு இறைச்சியை திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தில் கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியதாக ஜொமேட்டோ நிறுவனம் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இருந்து 3.6 டன் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். விசாரணையில் மன்னார்குடியில் நடைபெற இருந்த திருமணம் ஒன்றிற்காக கர்நாடகாவில் இருந்து இந்த இறைச்சிகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

  சென்னை கிண்டியில் உள்ள பிரபல பிரியாணி  உணவகத்துக்கு 3 டன்னுக்கு மேல் கெட்டுப்போன இறைச்சி வந்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறையின் நியமன தலைவர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது, லாரியில்  கெட்டுப்போன இறைச்சி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற இருந்த திருமணம் ஒன்றிற்காக  பிரபல பிரியாணி உணவகத்திடம் 3600 கிலோ மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சி ஆர்டர் செய்யப்பட்டதும். பிரியாணி நிறுவனம் இந்த ஆர்டரை ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும்  zomato நிறுவனத்திடம் வழங்கியதும் தெரியவந்தது.

  இதற்காக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து 3.5 டன் ஆடு, 12 ஆயிரம் சிக்கன் லெக் பீஸ் எடுத்து வரப்பட்டுள்ளது. இறைச்சி கெட்டுப்போய் இருப்பதை கண்ட திருமண வீட்டார் திருமணத்தை ரத்து செய்துவிட்டு இறைச்சியை திருப்பி அனுப்பினர். அந்த இறைச்சி சென்னை கிண்டியில் உள்ள உணவகத்துக்கு கொண்டுவரப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

  மேலும் படிக்க: குரங்கம்மை தொற்றுநோய் அல்ல.. பதற்றப்பட வேண்டாம்: அமைச்சர் ம.சுப்பிரமணியன்

  இதையடுத்து கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் ஒரு பகுதியை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாகவும் சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கும் அனுப்பி ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Meat, Zomato