• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக-கேரள எல்லைகள் மூடல்: சோதனைச் சாவடியில் நடைபெற்ற திருமணங்கள்

தமிழக-கேரள எல்லைகள் மூடல்: சோதனைச் சாவடியில் நடைபெற்ற திருமணங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லைபகுதியில் அமைந்துள்ள சின்னாறு சோதனைச் சாவடி அருகே இன்று  மூன்று திருமணங்கள் சாலையிலேயே நடைபெற்றன.

  • Share this:
பொதுவாக திருமண நிகழ்வை மக்கள் தம் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது தம் வசதிக்கேற்ப திருமண மண்டபங்களிலோ நடத்துவது வழக்கம்.

கொரானா வைரஸின் தாக்கத்தால் மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடியுள்ள நிலையில், யாரும் மாநிலங்களைக் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லைபகுதியில் அமைந்துள்ள சின்னாறு சோதனைச் சாவடி அருகே இன்று  மூன்று திருமணங்கள் சாலையிலேயே நடைபெற்றன.

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாப்பிள்ளைகளுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணமகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலவும் சூழலால் இவர்களிடையே திருமணம் செய்ய முடியாமல் இவர்களின் பெற்றோர் தவித்து வந்தனர்.

இதனையடுத்து, மாநில எல்லையில் வைத்து திருமணத்தை முடித்துவிடலாம் என எண்ணிய பெற்றோர் கேரள மாநில சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையை நாடியுள்ளனர்.

அவர்கள் சோதனைச் சாவடியில் வைத்து திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்ய முன்வந்ததால், தமிழகத்திலிருந்து மாப்பிள்ளைகளை மாநில எல்லைப் பகுதியான  உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் சாலையிலுள்ள சின்னார் சோதனைச் சாவடிக்கு வரவழைத்தனர்.

கேரள அரசு மணப்பெண்ணுக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் உறவினர் யாராலும் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அங்கு வைத்து திருமணத்தை முடித்து வைக்கப்பட்டு மணமகளை மணமகனுடன் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு இன்று மூன்று திருமணங்கள் நடைபெற்றன.



முதலில் கேரள மாநிலம் காந்தலூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், இரண்டாவதாக காந்தலூர் மிஷன் வயல் பகுதியைச் சேர்ந்த வேதகனி என்பவருக்கும்  அமராவதி நகர் பகுதியைச் சார்ந்த முத்தப்ப ராஜா என்பவருக்கும், மூன்றாவதாக மூணாறைச் சேர்ந்த கஸ்தூரி என்ற மணமகளுக்கும் சென்னையைச் சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: