யாருக்கெல்லாம் திருமண உதவி திட்டத்தில் நிதியுதவி கிடைக்காது?

மாதிரிப்படம்

தாலிக்கு தங்கம் திட்டம் ஏழ்மை நிலையில் உள்ள தகுதியானோருக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • Share this:

  தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.


  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

  இத்திட்டத்தில் கீழ் நிதியுதவி  பெற திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். இத்திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி  மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.

  இத்திட்டமானது மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள தகுதியானோருக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி,

  1.திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது.

  2.வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது.

  3.மாடி வீடு - நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது.

  4.ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

  5. திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: