Home /News /tamil-nadu /

''தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது!'' : மாரிதாஸ் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

''தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது!'' : மாரிதாஸ் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்

அண்ணாமலை

அண்ணாமலை

மாணவர் மணிகண்டன் இறப்பு விவகாரம் குறித்து யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

    யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார். இவர் maridhas Answers என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
     சமீபத்தில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மறுநாள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசார் அடித்ததால் தான் மாணவர் உயிரிழந்ததாக கூறி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென, மணிகண்டனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.



    மாணவர் மணிகண்டன் இறப்பு விவகாரம் குறித்து யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


    Also Read :

    மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழப்பு - சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!



    இன்று காலை அவருடைய டிவிட்டர் பக்கத்தில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா.
    தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.

    அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.






    இதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,


    ''மதுரையில் மாரிதாஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


    தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது!''


    என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி