கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி மாரியப்பன் தங்கவேலு தங்கம் பதக்கம் வென்றார். இதையடுத்து டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்யோ பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார். இதனையடுத்து அவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி தலைமைச் செயலகத்தில் இன்று மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். குரூப்- 1 பிரிவில் மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
ரியோ பாராலிம்பிக்கில் தங்கவேலு பதக்கம் வென்ற போதே அவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில் அரசு வேலை வழங்கப்படாமல் இருந்தது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தங்கவேலு தனக்கு இதுவரை அரசு வேலை கிடைக்கவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்தார்.
இதனையடுத்து அவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி தலைமைச் செயலகத்தில் இன்று மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். குரூப்- 1 பிரிவில் மாரியப்பனுக்கு தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.