விளையாடும் லஞ்சப்பணம்... திருவள்ளூரை குறிவைத்து சூறையாடும் தண்ணீர் திருட்டு கும்பல்...!

சட்டவிரோதமாக உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீரைப் பாதுகாத்து, தண்ணீர் திருட்டுக் கும்பலிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாடும் லஞ்சப்பணம்... திருவள்ளூரை குறிவைத்து சூறையாடும் தண்ணீர் திருட்டு கும்பல்...!
வரண்டு காணப்படும் நிலத்தடி
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:56 PM IST
  • Share this:
திருவள்ளூரில் சட்டவிரோதமாக பல இடங்களில் நிலத்தடி நீர், அதிகளவில் உறிஞ்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டில் போதிய மழை பெய்யாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால், சென்னையின் பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் ஆங்காங்கே பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு நிகராக தண்ணீர் லாரிகளும் அதிகளவில் ஓடி வருகின்றன.


சென்னையில் மக்களின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 850 மில்லியன் லிட்டராக உள்ளது. ஆனால், மெட்ரோ குடிநீர் நிர்வாகத்தால், 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது, குழாய் மூலம் 445 மில்லியன் லிட்டர் நீரும், 700 லாரிகள் மூலம் 62 மில்லியன் லிட்டர் நீரும் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சி, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, தனியார் உணவகங்கள், விடுதிகளுக்கு தினசரி சுமார் 30 டேங்கர் லாரிகள் வரை திருட்டுத் தனமாக விற்று வருகிறது.

Also read... நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், எதிர்காலத்தில் நீரை கேனில்தான் பார்க்க வேண்டும் - உயர் நீதிமன்றம்பல நாட்களாக சட்டவிரோத தண்ணீர் திருட்டு நடைபெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர். சராசரியாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த கும்பல் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அரசுக்கு தெரியாமல் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வரை இந்த தண்ணீர் திருட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சென்னையின் தண்ணீர் தேவையை தீர்க்க, சென்னையைச் சுற்றிலும் 4 ஆயிரத்து 200 சிறு ஏரிகள் உள்ளதாகவும், அவற்றை முறையாக பராமரித்தாலே தண்ணீர் பஞ்சம் வராது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதிகளவில் நடைபெறும் சட்டவிரோத தண்ணீர் திருட்டில் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதில், அதிகப்படியான லஞ்சப்பணம் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது.

உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதைத் தடுக்க உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீரைப் பாதுகாத்து, தண்ணீர் திருட்டுக் கும்பலிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்ற அவசர அவசிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading