கேரள வெள்ளத்தால் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் முடக்கம்

கேரள வெள்ளத்தால் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் முடக்கம்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: August 23, 2018, 11:04 AM IST
  • Share this:
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக தமிழகத்திலும் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. விடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. கேரளாவிற்கு உணவு, காய்கறி மற்றும் பால் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்தே அனுப்பப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பால் தமிகழகத்தில் பல்வேறு தொழில்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தருமபுரி மாவட்டம் அரூர் கால்நடைச் சந்தை முடங்கி, வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அரூர் அருகே சேலம் பிரதான சாலையில் செயல்படும் கோபிநாதம்பட்டி மாட்டுச்சந்தையில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஏரளமான மாடுகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும். மழைவெள்ளத்தால் கேரளாவிற்கு போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்த வாரம் கேரளாவில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. இதனால் இந்த வாரம் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோபிநாதம்பட்டி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. இதனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பூ வர்த்தகம் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, வண்ண மலர்களால் கோலங்கள் போடப்படுவது வழக்கம். இதற்காக ஆயிரக்கணக்கான டன் பூக்கள் கோவையிலிருந்து கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்படும்.  மல்லிகை, செண்டுமல்லி, வாடாமல்லி, சம்பங்கிபூ, என பல்வேறு வகைப்பட்ட மலர்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும். மழை வெள்ளத்தால் இந்த ஆண்டு பூ வியாபரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
First published: August 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading