முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை

சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை

குஷ்பு

குஷ்பு

குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் காவல்துறை தடை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இணைய வழி கூட்டம் ஒன்றில் பேசும்போது, மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாக பேசிய வீடியோ சமூக ஊடங்கங்களில் பகிரப்பட்டது. இதனிடையே, இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, தொல்.திருமாவளவனை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் பா.ஜ. க. வினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.  திருமாவளவனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரென்ட்டாகியது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்  தொல். திருமாவளவனை கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் நாளை நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது.

இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சங்பரிவார் அமைப்புகள் மீது நாளை காலை 10 மணிக்கு சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு தனித்தனியே மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிதம்பரத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாஜகவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர். காவல்துறை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீ அபினவ் ஆகியோர் வந்திருந்தனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் அதிகாரிகள், இரு தரப்பபினரின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறிவித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெறுவதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர். திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். இதனால் சிதம்பரத்தில் பதற்றமான சூழல் உருவாகியது. அதனால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, Kushbu, Manusmriti, Thol. Thirumavalavan