மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை செயல் முறை மூலம் தன்னால் விளக்க முடியும் என திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மன்சூர் அலி கான். தமிழக தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்தவர்களில் இவரும் ஒருவர். குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஊசி மணி, பாசி மணி விற்று, மன்சூர் அலிகானின் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த வித்தியாசமாக இருந்தது.
இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், வாக்குகள் பெற்ற பெரும்பான்மையில் 4-வது இடத்தை பெற்றார்.
இருப்பினும், தோல்வியால் மனம் நோகாத மன்சூர் அலிகான் தற்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் செயல் முறை விளக்கம் அளிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
Also watch: ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து… தாம்பரத்தில் குடும்பமே மூச்சுத்திணறி உயிரிழந்த பயங்கரம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.