நடிகை மனோரமா மகன் மது கிடைக்காத மன உளைச்சலில் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம்!

நடிகை மனோரமா மகன் மது கிடைக்காத மன உளைச்சலில் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம்!
மாதிரி படம்
  • Share this:
மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா மகன் மது கிடைக்காத மன உளைச்சலில் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை தி.நகர் நீலகண்டா மேத்தா தெருவில் வசித்து வருபவர் பூபதி(64).இவர் மறைந்த திரைப்பட நடிகை மனோரமாவின் மகன் ஆவார்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் மதுபான கடை இயங்க அரசு தடை விதித்துள்ளது.


இதனால் மது கிடைக்காமல் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த பூபதி திடீரென்று நேற்று இரவு தூக்கத்திற்காக அதிகளவு தூக்கு மாத்திரை சாப்பிட்டு உள்ளார். பின்னர் இதனால் வலிப்பு ஏற்பட்டதால் உறவினர்கள் இவரை மீட்டு  அப்பலோ மருத்துவமனையில் சிகிசைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தியாகராய நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading