இரவில் முறைகேடாக நெல் கொள்முதல்: வாகனத்தைப் பிடித்து வைத்த விவசாயிகள்..

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரிகளின் மூலம் வெளி மாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரவில் முறைகேடாக நெல் கொள்முதல்: வாகனத்தைப் பிடித்து வைத்த விவசாயிகள்..
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம்.
  • Share this:
டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பெரும்பான்மையான பகுதிகளில் முடிந்து, தற்போது குறுவை நெல் நடவிற்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட, மாநில நெல்லை முறைகேடாக  வியாபாரிகளிடம் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் அடிச்சேரியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரிகளின் மூலம் வெளி மாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகளுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரைப்  பிடித்து வைத்து, விவசாயிகள் அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வடுவூர் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை, நடத்தினர் விவசாயிகளிடம் புகார் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


Also see:

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தூற்ற வேண்டும். ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிப்பார்கள். இதையும் மீறி கொள்முதல் செய்யப்படும் ஒரு மூட்டை நெல்லுக்கு ₹20 கட்டாய வசூல் செய்கிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை.விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் தட்டிக்கழித்து விட்டு, இப்போது வியாபாரிகளிடம் முறைகேடாக சாக்குகளை அனுப்பி கொள்முதல் செய்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்கின்றனர்.

இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில், 25 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading