முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணாமலையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் தீபாவுக்கு 11 வயது ஆகின்றது. இன்று தன் வீட்டிலுள்ள தொலைக்காட்சியை இயக்க தீபா சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள், அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீபாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Girl dead, Mannargudi