Home /News /tamil-nadu /

பப்ளிசிட்டிக்காக தாறுமாறு பதிவுகள்... அவதூறு புகைப்படத்தால் கம்பி எண்ணும் அவலம்...!

பப்ளிசிட்டிக்காக தாறுமாறு பதிவுகள்... அவதூறு புகைப்படத்தால் கம்பி எண்ணும் அவலம்...!

Youtube Video

  • News18
  • Last Updated :
    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டதாக டிக் டாக் பிரபலமான மன்னை சாதிக் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. டிக் டாக், முகநூல், யூட்யூப் என சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். நடிகை ஹன்சிகாவிற்கு காதல் தூதுவிட்டு அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பிரபலம்.

    மியூசிக்கலி டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு மற்றவர்கள் வயிற்றரிச்சலுக்கும் ஆளானார் சாதிக் பாஷா.  பெண்கள் தனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறி அவர் வெளியிட்ட வீடியோ கடும் விமர்சனங்களுக்கு ஆளானனது.

    சாதிக் பாஷாவின் தொல்லை தாங்க முடியாமல், அவருக்கு எதிராக சமூக வலைதளவாசிகள் மீம்ஸ் போட்டு தாக்கினர். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்களை தாக்கி சாதிக் பாஷா கடுமையாக கொந்தளித்து வீடியோவை வெளியிட்டார்.

    விளையட்டாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைதளத்தில் உள்ளவர்களை மட்டும் வெறுப்பேற்றி வந்தவர் தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார்.

    தமிழிசை சௌந்தரராஜன் படத்துடன் தனது படத்தை இணைத்து சாதிக் பாஷா வெளியிட்ட புகைப்படம் அவருக்கு வில்லங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து, மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் சாதிக் பாஷாவை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். 15 நாட்கள் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Published by:Sankar
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி