ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அனைத்து முன்னணி ஆடியோ தளங்களில் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி பதிவேற்றம்

மன் கி பாத்தின் முதல் நிகழ்ச்சி 2014 அக்டோபர் மாதம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இடையே 2019-ல் மக்களவை தேர்தல் காரணமாக மன் கி பாத் உரை இடை நிறுத்தப்பட்டது. இதுவரைக்கும் மொத்தம் 83 முறை மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :

அனைத்து முன்னணி ஆடியோ தளங்களிலும் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு மோடி பேசுவார். 'மனதின் குரல்' என்ற பெயரில் தமிழில் இந்த மன் கி பாத் நிகழ்ச்சி அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பிராந்திய மொழிகளில் செயல்படும் அனைத்து ரேடியோக்களிலும் ஒலிபரப்பு செய்யப்படுவதால் மன் கி பாத் கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது.

இந்நிலையில் Spotify, Hungama, Gaana, JioSaavn, Wynk மற்றும் Amazon music உள்ளிட்ட முன்னணி ஆடியோ தளங்களிலும் மன் கி பாத் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தற்போது அரசு தொலைக்காட்சிகள், ரேடியோ, நமோ ஆப், யூடியூப்களில் மன் கி பாத் உரையை கேட்கலாம். 2014-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மன் கி பாத்தின் முதல் நிகழ்ச்சி 2014 அக்டோபர் மாதம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இடையே 2019-ல் மக்களவை தேர்தல் காரணமாக மன் கி பாத் உரை இடை நிறுத்தப்பட்டது. இதுவரைக்கும் மொத்தம் 83 முறை மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.

First published: