திருவாரூர் நகர பகுதியான கீழ வீதியை சேர்ந்தவர் இலைக்கடை முருகன் வயது 45. இவர் இலை கடை நடத்தி வந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு முருகன் விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்கிற 13 வயது மகள் உள்ளார். அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகன் உயிரிழந்துவிடவே அவரது குடும்பத்தார் செய்வதறியாது திகைத்தனர். முருகனுக்கு ஆறு சகோதரிகள் உள்ளனர். தனது சகோதரரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை திருவாரூரில் மிக பிரமாண்டமாக நடத்த வேண்டுமென முடிவு எடுத்துள்ளனர்.
அதன்படி, திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2,000 பொதுமக்களுக்கு உணவு வழங்கி, சுமார் 600 சீர்வரிசை தட்டுகள் எடுத்து அதனை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், லாரியில் முகப்பில் மறைந்த இலைக் கடை முருகனின் திருவுருவப் படமும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சீர்வரிசை ஊர்வலத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சீர்வரிசை ஊர்வலம் வடக்கு வீதியில் தொடங்கி மண்டபம் இருக்கும் தெற்கு வீதி வரை நடைபெற்றது.
Must Read : எங்க ஊரு பெயர் காணோம்..! - வடிவேலு பாணியில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்
மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகள் குறித்து திருவாரூர் நகர பகுதி மக்கள் பெருமையுடன் பேசி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Thiruvarur, Tiruvarur