செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் மரணம்: ஜவாஹிருல்லா இரங்கல்..

செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் மரணம்: ஜவாஹிருல்லா இரங்கல்..

எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்.

இரு முறை சங்கிகளால் தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ் தனது இறுதி மூச்சு வரை நமது நாட்டில் சமூக நல்லிணக்கமும். மனித உரிமைகளின் மாண்புகளும் நீடித்து நிலைத்திருக்கச் சளைக்காமல் பாடுபட்டு வந்தார்' என்று தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மனித உரிமைகளுக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் சளைக்காமல் பாடுபட்ட போராளி சுவாமி அக்னிவேஷின் இழப்பு மன வேதனை அளிப்பதாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  ’சமூக செயற்பாட்டாளர், கொத்தடிமைக்கு எதிரான போராளி, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டப் பாடுபட்ட தியாகி சுவாமி அக்னிவேஷ் அவர்கள் மரணித்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.

  நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்ற அவர் கல்லூரி ஆசிரியர் பதவியைத் துறந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மனித உரிமைகளுக்காகத் தனது இறுதி மூச்சு வரை சளைக்காமல் போராடிய போராளியாக விளங்கினார்.

  சுவாமி அக்னிவேஷ்


  அரியானா மாநிலத்தில் நிலவிய கொத்தடிமை முறையை எதிர்த்து களம் கண்ட சுவாமி அக்னிவேஷ் பிறகு அம்மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் பதவி வகித்தார். கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறியதைக் கண்டித்து தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் சுவாமி அக்னிவேஷ்.

  மேலும் படிக்க: மதிப்பெண் அட்டை என்பது குடும்பத்தினருக்கு கெளரவம்., மாணவர்களுக்கு மன அழுத்தம் - பிரதமர் மோடி

  காவி ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த சுவாமி அக்னிவேஷ் காவி நிறத்தின் புனிதத் தன்மையை மீட்க அரசியல் சந்தரப்பவாதிகளிடமிருந்தும் வேடதாரிகளிடமிருந்து மீட்கத் தான் பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டவர்.  சிகாகோ உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுவாமி அக்னிவேஷ் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வகுப்புவாதம் சிதைத்து வரும் நிலையில் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் என்னவாகும் என்று முழங்கியவர்.

  இரு முறை சங்கிகளால் தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ் தனது இறுதி மூச்சு வரை நமது நாட்டில் சமூக நல்லிணக்கமும். மனித உரிமைகளின் மாண்புகளும் நீடித்து நிலைத்திருக்கச் சளைக்காமல் பாடுபட்டு வந்தார். அவரது மரணம் நாட்டிற்கு ஈடு இணையில்லா பேரிழப்பாகும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

   
  Published by:Gunavathy
  First published: