முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மங்களூரு குண்டு வெடிப்பு: ஷாரிக் வாட்ஸ்அப் DPயில் ஈஷா சிவன் படம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மங்களூரு குண்டு வெடிப்பு: ஷாரிக் வாட்ஸ்அப் DPயில் ஈஷா சிவன் படம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மங்களூரு குண்டு வெடிப்பு

மங்களூரு குண்டு வெடிப்பு

தமிழகத்தில் தங்கி இருந்த பகுதிகளில் யாருடன் சந்தித்து பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான ஷாரிக், கோவை ஈஷா மையத்தில் உள்ள சிவன் சிலையை தனது வாட்ஸ்அப்பில் DPயாக வைத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்கள் தங்கி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இந்த பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தங்கி இருந்த பகுதிகளில் யாருடன் சந்தித்து பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் - அண்ணாமலை உத்தரவு 

குறிப்பாக கோவையில் மூன்று நாட்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள MMV தங்கும் விடுதியில் முகமது ஷாரிக் தங்கி உள்ளார். அப்போது தனது அடையாளத்தை மாற்றி கௌரி அருண்குமார் என்ற பெயரில் போலியான கர்நாடக மாநில முகவரி கொடுத்து அவர் தங்கி சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஷாரிக்கின் வாட்ஸ் அப் DPயில் கோவை ஈஷா மையத்தில் உள்ள சிவன் படம் இருந்தது தெரிய வந்தது. அவர் ஈஷா மையம் சென்றாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவர் தனது அடையாளத்தை மறைக்க இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

First published:

Tags: Isha yoga centre, Mangalore, Terror Attack