ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மங்களூரில் தீவிரவாத தாக்குதல் : தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி அலெர்ட்!

மங்களூரில் தீவிரவாத தாக்குதல் : தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி அலெர்ட்!

ஆட்டோ வெடிப்பு சம்பவம்

ஆட்டோ வெடிப்பு சம்பவம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மங்களூரில் ஆட்டோ வெடித்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

  இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக டிஜிபி,  ’கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல. பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிற்கும் வாகனங்களை சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

  குறிப்பாக தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்களில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Mangalore, Tamilnadu, Terror Attack